வெள்ளி, மே 26, 2017

ஐ.......நூறாவது பதிவு

திருவாரூர் ஐநூற்றுப் பிள்ளையார் துணை

      ணக்கம் நட்பூக்களே... நலமா ? நலமே விளைவு என்ன திடீரென நலகுசலம் என்று நினைக்கின்றீர்களா ? எல்லாம் மஸ்க்காதான். மஸ்க்கா என்றால் அரபு மொழியில் காக்கா பிடித்தல் என்று பொருள் இப்பொழுது காக்கா பிடிக்க காரணம் ? இது எமது ஐநூறாவது பதிவு இதுவே கா’’ரணம். இதுவரை தந்த பதிவுகளில் ஐம்பது பதிவுகளாவது உங்களின் மனதை தொட்டுச்சென்று இருக்கும் என்பது எமது திண்ணமான எண்ணம். இதுவரை எமது எழுத்துக்களின் நன்மையை திறந்த மனதோடு பாராட்டியும், உயர்ந்த மனதோடு தவறுகளை சுட்டியும், காண்பித்துச் சென்ற அனைத்து உள்ளங்களையும் பெயர்களைச் சொல்லி நன்றி பாராட்ட மனதில் இடமுண்டு என்றாலும் யாராவது விட்டுப்போய் விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக பொதுப்படையில் சொல்கின்றேன்.

நன்றி सुक्रिया மஞ்சி Thanks இஸ்தூத்தி നന്നി ஒல்லது  شـــكرا சலாமத்.

இதுவரை எமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே, எண்பத்து ஆறு லட்சத்து, நாற்பத்தி ஏழாயிரத்து, ஐநூற்று முப்பத்தி இரண்டு நபர்கள் (எண்ணால் 1, 86, 47, 532) என்று சொல்லிட ஆசைதான் ஆனால் ஆனை ஏற ஆசையிருக்கு உந்தி ஏற ஜீவனில்லை என்பதைப்போல்தான் என்நிலை ஆகவே எம்பூட்டு பேரு பார்த்தாங்கன்னு சைடு கெஜட்டுல நீங்களே பார்த்துக்கோங்க...

இனி நாமலும் அரசியல் பதிவுகள் எழுதினால்தான் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும் போல தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்பதுபோல் தமிழ் நாட்டுக்குள் வந்தவன் எல்லாம் தலைவன் ஆகப்பார்க்கிறான் அப்படி என்றால் மண்ணின் மைந்தன் நான் ஆககூடாதா ? என்னுடைய நிறம்தான் எலுமிச்சை போல மஞ்சலும், சிவப்பும் கலந்த பொன் நிறமே தவிர நானும் பச்சைத்தமிழனே என்பதை பதிவர்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக எனது கணினி இணையம் பிரச்சனை காரணமாக செல்பேசியின் வழியாக படித்து கருத்துரை இட்டு வருகிறேன் பலரது தளங்களிலும் தமிழ் மணம் ஓட்டு செய்ய இயலவில்லை பொதுவாக அனைவருக்கும் நான் தமிழ் மணம் ஓட்டு போட்டு விடுவேன் அரசியல்வாதிகளுக்குத்தான் ஓட்டுப்போட்டதில்லை.. இணையம் விரைவில் சரியாகி அடுத்த மாதம் முதல் அனைவரது தளத்திலும் மீண்டும் தமனாவுக்கு திடீர், திடீரென குத்து விழும் என்பதை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

முன்பெல்லாம் எனது பதிவுகள் வெளியான ஒரு மணி நேரத்தில் தமிழ் மணத்தில் நுழைந்து விடும் இப்பொழுதெல்லாம் பதிவு வெளியாகி 47 மணி நேரமாகியும் ஏழாவது ஓட்டு கிடைக்காததால் 48 வது மணி நேரத்திலேயே பதிவு காலாவதி ஆகி விடுகிறது.

இதன் காரணமென்ன என்பதை சோலந்தூர், சோசியர் சோனைமுத்து அவர்களிடம் கோடாங்கி அடித்து பார்த்ததில் குரு நாலாம் வீட்டிலிருந்து இடப்பெயர்ச்சி கொண்டுள்ளான் வரும் வைகாசி போயி சித்திரை வந்தால் சுக்கிரன் மீண்டும் உச்சிக்கு வருகிறான் என்று சொன்னார் மேலும் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று எமது நண்பர் பக்திப்பழம் திரு. வலிப்போக்கன் அவர்களும் ’’ஜொள்ளி’’ இருக்கின்றார் இனியெனும் பகவான்ஜி அருளால் நன்மையே நடக்கட்டும்.

நட்பூக்களே தொடர்ந்து தங்களது கருத்தை ஆவலுடன் தேடும்...
உங்கள் தேவகோட்டை


கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergee كـــيللرجــــي

திங்கள், மே 22, 2017

உகாண்டா மாப்பிள்ளை

தேவகோட்டை விமான நிலையத்தில் இளநங்கைகளிருவர்.

நளாயினி-
யேண்டி மதிவதனி உனக்கு வெளிநாட்டுல வேலை பார்க்கிற மாப்பிள்ளை பார்த்து இருக்கிறதா சொன்னியே எந்த நாடு ?
மதிவதனி-
உகாண்டா.
நளாயினி-
மாப்பிள்ளை எப்படி பிடிச்சு இருக்கா ?
மதிவதனி-
யேண்டி நீ வேற மாப்பிள்ளை ஃபோட்டோ அனுப்பி இருக்கார் பாருடீ.....


சாம்பசிவம்-
அடடா.. ராட்டணம் சுற்றலாம் போலயே... 

வியாழன், மே 18, 2017

குளித்தலை, குடிகாரன் குமார்

1.ஜனவரி மாதச்சம்பளம் ஜனகண பாடியாச்சு.

2.பிப்ரவரி மாசசம்பளம் பீப்பீ ஊதியாச்சு.

3.மார்ச் மாசசம்பளம் மார்ச்சுவரியில போச்சு.

4.ஏப்ரல் மாசசம்பளம் ஏப்பம் விட்டாச்சு.

5.மே மாதச்சம்பளம் மேய்ச்சல்ல விட்டாச்சு.

6.ஜூன் மாசச்சம்பளம் ஜூஸ் குடிச்சே போச்சு.

7.ஜூலை மாசச்சம்பளம் ஜூலிகிட்டே விட்டாச்சு.

8.ஆகஸ்டு மாசச்சம்பளம் ஆக்ஸிடெண்ட்ல போயிருச்சு.

9.செப்டம்பர் மாசச்சம்பளம் செப்டிக் ஆகிப்போச்சு.

 10.அக்டோபர் மாசச்சம்பளம் டாக்டர்கிட்டே போச்சு.

11.நவம்பர் மாசச்சம்பளம் பம்பர்ல போச்சு.

12.டிசம்பர் மாசச்சம்பளம் டிஸ்மிஸ் ஆச்சு.


சிவாதாமஸ்அலி-
இப்படியே போனா இவன் பூவாவுக்கு என்ன செய்வான்...

செவ்வாய், மே 16, 2017

தலைவா.. அரசாள வா !


நட்பூக்களே... என் மனதில் 2 ½ வயதிலிருந்தே அரித்துக் கொண்டிருந்த விடயமிது நடிகனுக்கும், ரசிகனுக்கும் உள்ள பந்த உணர்வுகள் எப்படி உருவாகின்றது ? எனக்கு மட்டும் உண்டாகாதது ஏன் ?

நடிகன் என்பவன் எல்லா மனிதர்களையும் போலவே வயிற்றுப் பிழைப்புக்காக ஏதோவொரு வகையில் திரையுலகத்தில் நுழைந்து விடுகின்றான் ஆரம்ப காலத்தில் சோத்துக்கு பணம் கிடைத்தால் போதும் என்று வந்தவன் அவனது திரைப்படம் நல்ல கதையம்சத்தின் காரணமாக, நல்ல கருத்துகள் அடங்கிய பாடல்களின் காரணமாக, நல்லதொரு இசையை கொடுத்ததின் காரணமாக, கேட்பதற்கு இனிமையான ராகங்களில் பாடியதின் காரணமாக, நல்ல நகைச்சுவைகளின் காரணமாக, புதுமுக நடிகையின் தாராள மனதின் காரணமாக, தணிக்கைகுழு அதிகாரிகளின் வாழ்வாதாரமும் உயர்வதின் காரணமாக ஏன் ? இவனது நல்ல நடிப்பின் காரணமாகவும் என்பதை ஏற்றுக்கொள்வோம் திரைப்படம் பட்டி தொட்டிகளில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி விடுகிறது. உடனே இவனும் தனக்கு சம்பளத்தை நிர்ணயிக்கிக்கின்றான் இந்த திரைப்படத்தின் பின்னணியில் உழைத்தவர்கள் எல்லோருமே வழக்கம் போல தனது உழைப்பைக் கொடுத்து தனது வழக்கமான சம்பளத்தை பெற்றுக்கொண்டு இருக்கின்றார்கள் இவனது திரைப்படம் வெற்றி பெற்றதால் அடுத்தும் இயக்குனர்கள் இவனுக்கு வாய்ப்பு கொடுக்க அந்தப்படமும் ஏதோவொரு காரணத்துக்காக வெற்றி பெற்று விடுகிறது என்றே வைத்துக் கொள்வோம் உடன் இவன் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து விடுகின்றான் அடுத்து தயாரிப்பாளர்கள் இவனை முற்றுகையிட இவனது சம்பளமும் உச்சாணிக் கொம்புக்கு சென்று விடுகிறது இந்த தருணம் பார்த்து வேலையற்ற வெட்டிக்கூட்டம் ஒன்று வீதிகளில் திரியும் பார்த்து இருப்பீர்கள் அவர்கள் இந்த நடிகரை நாடுவார்கள் நாங்கள் உங்களுக்கு நற்பணி (?) மன்றம் அமைக்கப் போகிறோம் தங்களது அனுமதி வேண்டும் என்பார்கள் உடனே இவனும் இந்த மாதிரியான அரைவேக்காடுகள்தான் நம்மை இன்னும் உயரத்துக்கு கொண்டு போகும் என்று சில ஆயிரங்களை தூக்கி எறிவான் இந்த பொறுக்கிகள் அதை பொறுக்கி வந்து பகுதியை வாயில் ஊத்தி விட்டு மிகுதியில் இவனுக்கு ஒரு பட்டம் கொடுத்து ரசிகர் மன்றம் ஆரம்பித்து தியேட்டரில் திரைப்படம் வெளியானதும் பேனர் வைத்து, விசில் அடித்து வர்ணப்பேப்பர்களை வீசியெறிந்து ஆரவாரம் செய்வார்கள் இந்த கேவலத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருமே உடன்படுவார்கள் காரணம் இவர்களால் திரைப்படம் விளம்பரமாகி நல்ல வசூலைப்பெறும் இதற்கு பகரமாக இந்த பொறுக்கிகளுக்கு திரைப்படம் பார்ப்பது இலவசம்.

இவனின் 4 திரைப்படங்கள் வெற்றியானதும் இவர் மிகப்பெரிய வீரனாகவே திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவான் நாட்டுக்காக போராடுவான், அநியாயங்களை எதிர்ப்பான், திரைப்படத்தில் வில்லன் நாயகியை பலாத்காரமாய் இழுத்துப்போய் தனது இச்சையை தீர்க்கும் தருணத்தில் நாயகன் திடீரென தோன்றி அவனை வீழ்த்தி காப்பாற்றி தியேட்டரில் இருந்த தமிழ் நாட்டு தாய்மார்களின் மனதில் பாலை வார்த்து விடுவான் இதன் மூலமும் இவன் நல்லவன் என்றே மக்கல்ள் நம்பி விடுகின்றார்கள் பிறகு இவன் அவளை பவ்யமாய் கெடுத்து விடுவான். அது இந்த முடுமைகளுக்கு தெபுரியாது என்பது வேறு விடயம். திரைப்படங்களில் ஒரேயொரு உதை விடுவான் கிராஃப்பிக்ஸ் கலைஞர்களின் திறமையால் அந்த உதையில் 50 நபர்கள் அந்தரத்தில் பறப்பார்கள் பறப்பவர்கள் எல்லோருமே யார் தெரியுமா ? உண்மையிலேயே ஸ்டண்ட் கற்றவர்கள் இவர்களில் ஒருவன் நாயகனை ஒரு உதை விட்டால் போதும் அந்த நிமிடமே இந்த அறியாமைகளின் ஆதர்ச நாயகன் செத்து பல வருடங்கள் முடிந்திருக்கும் ஆனால் இதைப்பார்த்து இந்த அரிய ஆமைகள் கை தட்டி ஆரவாரம் செய்யும் திரைப்படங்களில் கடைசிவரை நியாயமானவனாகவே வலம் வருவான் திரைக்குப் பின்னால் இவர்களின் உண்மையான முகம் ஸூட்டிங்குகளில் லைட்பாய் வேலை பார்ப்பார்களே சாதாரண கூலி வேலைக்கு அவர்களுக்கு நன்றாகவே தெரியும் காரணம் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து தகுதியின் காரணமாக அவர்களுடன் நெருங்க முடியாமல் பக்கத்திலேயே வாழ்பவர்கள் ஆனால் இந்த பாமரப்பய ரசிகனுக்கு கடைசிவரை தெரியாது இவன் நியாயமானவன்தான் என்பது இந்த அறியாமைகளின் ரத்தங்களில் கலந்து விடும் திரைப்படத்தில் அநியாய ஆட்சி செய்யும் முதல்வரை எதிர்த்து குரல் கொடுப்பான் பாருங்கள் உடனே இந்தப் பாமரப்பய கூட்டம் தலைவா.. அரசாள... வா ! என்று கத்தத் தொடங்கியவன் அவன் கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்கா விட்டாலும் கடைசிவரை கத்துவதை விடமாட்டான்.

திரையில் எத்தியே பலரை வீழ்த்தும் இந்த நாயகர்கள் உண்மையில் வெள்ளமோ, சுனாமியோ வந்து மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பொழுது ஜன்னல் வழியே அந்தோ பரிதாபம் என்று வேடிக்கை பார்ப்பார்கள் ஆனால் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி துணிந்து இறங்கி யாரையாவது காப்பாற்றி இருப்பான் இதற்காக இந்த நடிகர்களை நான் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை உண்மையில் முடியாதுதான் காரணம் பலகோடிகள் சொத்து சேர்த்து வைத்து இருக்கின்றோம் இந்த உலகில் உள்ள எல்லா சுகங்களையும் அனுபவித்து விடவேண்டுமென்ற திட்டங்களோடு வாழும் மனிதன் இந்த வெள்ளத்தில் இறங்கிச் சென்று இவனையும் கொண்டு போய் விட்டால் ? மேலும் இந்த வெள்ளத்தில் இறங்கிப் போனாலும் அறியாமைக் கூட்டங்கள் ‘’ஹை நடிகர் வால்டர் வடுகநாத் வந்துருக்காரு’’ என்று சொல்லி கூட்டத்தை கூட்டி நெருக்கியடித்து ஆட்டோ கிராப்கூட கேட்பாங்களே வம்பு எதற்கு ?

அறியாமை ரசிகர்களே.. இதுதான்டா யதார்த்த வாழ்க்கை அவனும் மனுஷன்தான்டா அவனுக்கு மட்டும் ஏதோ அமானுஸ்ய சக்தி இருப்பது போல் நினைக்காதே... இதற்கு உசிலம்பட்டி, உடுக்கையடி உலகநாதன் இருக்கின்றாரே அவரிடமாவது ஏதாவது (?) இருக்கும் சமீபத்திய பேரிடரில் நடிகர் ராஜ்கிரண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது ராணுவ வீரர்கள்தான் அவரை உயிருடன் மீட்டு இருக்கின்றார்கள் இதே நடிகர் திரைப்படத்தில் எத்தனை பேரை தூக்கி அடித்தார் ? நடைமுறை வாழ்க்கையில் இதெல்லாம் முடியாதுடா ரசிகனே... விஞ்ஞான வளர்ந்து விட்ட இந்த காலத்திலாவது கொஞ்சமாவது யோசிடா... இதில் இன்னொரு விடயம் நீங்க யோசிங்கடா... நீங்க கொண்டாடிய, கொண்டாடுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் நம் இன தமிழன் இல்லையடா உன்னால் நாட்டுக்கு பெருமை தேடி கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை சிறுமையை சேர்த்து விட்டு செல்லாதே.

குறிப்பு - நான் எந்த நடிகரையும் மனதில் வைத்து எழுதவில்லை அப்படி யாரும் நினைத்தால் அதனைப்பற்றிய கவலையும் எனக்கு இல்லை ஆனால் இது பெரும்பாலும் எல்லா நடிகருக்கும் பொருந்தும் - கில்லர்ஜி

ஞாயிறு, மே 14, 2017

Mother's Day

Mother of Killergee

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் - கில்லர்ஜி
தாய்
அதிக அபிப்பிராய கதை சொல்லுகிற பரிசுத்தமான ஒளிவுடன் பிரகாசிக்கும் இருப்புப்பாதை.

More
Observation
Taleteller
Hollow
Effulgent
Rail


video
 காணொளி
Related Posts Plugin for WordPress, Blogger...